11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார். 62 அகவையுள்ள ராஜேந்திரன் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி இருந்தார். இன்று காலை சென்னைக்கு வந்த போது, திண்டிவனம் அருகே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.