06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் இதை ஏலம் எடுத்து இருக்கிறார். இதே எலுமிச்சை பழத்துடன் இன்னும் சில சின்ன சின்ன பொருட்களும் ஏலம் விடப்பட்டு உள்ளது. தேங்காய், பூ, மாலை, வாழைப்பழம் ஆகியவையும் ஏலம் விடப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் எலுமிச்சை பழம் ஒன்று இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது இதுவே முதல்முறை. சிவராத்திரி சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுக்க சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அதேபோல் சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதே இந்த ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த சிவராத்திரியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு உள்ளது. பூசையில் இருந்த தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க வந்துள்ளனர். அதிகபட்சமாக எலுமிச்சை பழம் ஒன்று 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பூசைக்கு, கடவுளின் அடியில் வைத்து படைக்கப்பட்டு உள்ளது. ஓலப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற நபர் இதை வாங்கியுள்ளார். அதேபோல இன்னும் சில பொருட்கள் 5000 ரூபாய் வரை ஏலம் போய் இருக்கிறது. பழந்திண்ணி கருப்பண்ணன் பலருக்கு குலதெய்வம் என்பதால், தங்கள் குலதெய்வத்தை பெருமைப் படுத்;;தும் விதமாக ஏலம் இவ்வளவு சிறப்பாக நடத்தப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



