தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு எப்படி நூற்றாண்டு வந்தது? இந்தியாவின் 75வது விடுதலைநாளே (இரண்டு கிழமைகளில்) இந்த ஆண்டுதான் கொண்டாடவுள்ளோம் என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால், இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அதற்கு நமக்கு தெளிவான விடை கிடைத்துவிடும். 16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்காக தலைமைச்செயலகம் முழுவதும் கண்ணை கவரும் வண்ண விளக்குகளால் அழகூட்டப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு இன்று காலை முதலே காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிவிரைவுப் படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 3000க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் தலைமைச் செயலகத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்கள் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தகுந்த அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது மோப்பநாய் நாய் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்பட்டு வருகின்றன. நாளை வரவுள்ள குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து தலைமைச் செயலகம் அந்த பாதுகாப்பு படையினர் அங்கிருந்து விமான நிலையம் வரை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு எப்படி நூற்றாண்டு வந்தது? இந்தியாவின் 75வது விடுதலைநாளையே (இரண்டு கிழமைகளில்) இந்த ஆண்டுதான் கொண்டாடவுள்ளோம் என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால், இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அதற்கு நமக்குத் தெளிவான விடை கிடைத்துவிடும். சட்டப் பேரவை என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது. நடப்பு 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போதைய தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919-இன் படி, சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மன்றத்தின் முதல் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் 9 சனவரி 1921 ல் கூடியது. இதன் தொடக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரசரின் தந்தைவழி உறவான) அவர்களால், அப்போதைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய அரசாணை 1935-இன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, ஈரவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டமன்றம் முறையே சூலைத் திங்கள், 1957-ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் ஒய்வு பெறுமாறு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஒய்வு பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்குமாறு முறைபடுத்தப்பட்டது. பிரித்தானிய ஆட்சிகாலத்திலேயே சென்னை மாகாணத்தில், காங்கிரஸ் கட்சி, ஹிந்தியைத் திணித்து தமிழ்நாட்டு மக்களை ஹிந்திக்கு எதிராக முதலாவது ஹிந்தித் திணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கக் காரணமானது. இந்திய விடுதலைக்கு முன்பே காங்கிரஸ் பதவி விலகிய போது, பிரித்தானிய ஆட்சியில் நீதிக்கட்சியின் முயற்சியில் தமிழ்நாட்டுக் கல்வியில் இருந்து ஹிந்தி அகற்றப்பட்டது. மீண்டும் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கல்வித்திட்டத்தில் ஹிந்தியை ஒரு பாடமாக அமைத்தது. மீண்டும் திமுக ஆட்சியில் ஹிந்தி முழுமையாக தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.
முதல் சட்டமன்றத்தில் திமுகவின் தொடக்கமான நீதிக்கட்சி ஆட்சியில் அமைந்தது. தற்போது நூறாவது ஆண்டில் மீண்டும் திமுகவே ஆட்சியில் அமைந்தது திமுக மகிழத்தக்க செய்தியாகும். நீதிக்கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கும், தமிழுக்கும் மரியாதை தொடங்கிய காலமாகும். அடுத்து பிரித்தானிய இரட்டை ஆட்சி முறையிலேயே சென்னை மாகணத்தில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் சமூக நீதிக்கும், தமிழுக்கும் எதிராக அமைந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.