தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள்மாவட்டங்களிலும், மலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மட்டும் நேற்று மழை பெய்தது.அந்தவகையில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 2 செ.மீ., மற்றும் பொள்ளாச்சி, பேச்சிப்பாறை, சிவகங்கை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
தொடர்ந்து வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 14-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) பிறகு ஓரிரு நாட்கள் கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



