Show all

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: படுதோல்வி அடைந்தது இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி ஓய்வில் இருப்பதால் ரோகித் சர்மா இப்போட்டியில் கேப்டனாக இருந்தார்.  தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 7 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்தியா 39.2 ஓவரில் 112 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக டோனி 65 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இலங்கை அணி தரப்பில் லக்மல் 4 விக்கெட்டும், பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

அதன்பிறகு, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், பும்ரா, பான்ய்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.