இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரைவில் ராகுல் டிராவிட் பதவியேற்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார். தற்போதுள்ள தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இயக்குநராக பதவி உயர்வு பெற உள்ளார். இந்திய அணியின் இயக்குநராக ஏப்ரல் 14-ம் தேதி பதவியேற்க உள்ளார் அனில் கும்ப்ளே. இதனையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவுக்கு ராகுல் டிராவிட்டும் ஒப்புதல் அளித்துவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணி இன்னும் சிறப்பான வெற்றிகளையும், வீரரகள் தங்களை ஆட்ட நுணுக்கங்களை மெருகேற்றி கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



