இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார். கால் இறுதியில் இந்தியாவின் மற்றொரு நட்சத்திரமான சாய்னா நெஹ்வாலையும், அரை இறுதியில் கொரியாவின் சுன் ஜி ஹியுனையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் அவர் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். சிந்து ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் கரோலினா மரினிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக 21-19, 21-19, 21-16 என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக இந்தியன் ஓபனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சிந்துவுக்கு தங்கப் பதக்கத்துடன் முதல் பரிசாக ரூ.16 லட்சமும், 2வது இடம் பிடித்த கரோலினா மரினுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.8 லட்சமும் கிடைத்தது. சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து இந்தியன் ஓபனில் பட்டம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையும் சிந்துவுக்கு கிடைத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



