இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை ஏற்கனவே தென் ஆப்பிரிக்கவிடம் இழந்துள்ளது. அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக கிறிஸ் மோரிஸ் விலகியதால், ஸ்பின்னர் ஷம்சி சேர்க்கப்பட்டார். முதலில் இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் 34 ரன்களிலும் அதை தொடர்ந்து வந்த கோஹ்லி மற்றும் ரகானே முறையே 36 மற்றும் 8 ரன்கள் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாகினர். ரோகித் 115 ரன் (126 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்த பிறகு மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. இது ரோஹித் ஷர்மாவின் 17-வது ஒரு நாள் போட்டி சர்வதேச சதம் ஆகும். ஒரு நிலையில் இந்தியா எளிதாக 300 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியாக இந்திய அணி 274 ரன் மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி என்கிடி 4 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி ஆடியது. தி ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக அம்லா 71 ரன்களும், மார்க்ராம் 32 ரன்களும் மில்லர் 36 ரன்களும் மற்றும் கிளாசன் 39 ரன்களும் குவித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்னுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் சாஹல் மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடைபெற உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



