17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் முதல் முறையாக இந்தியா பங்கேற்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியை முதல் முறையாக இந்திய நடத்த உள்ளது. உலகக்கோப்பையை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியா தானாகவே இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இருபத்தி நான்கு அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா A பிரிவில் உள்ளது. இப்போட்டியில் பங்குபெறும் அணிகளின் விவரம் பிரிவு வாரியாக: A பிரிவு - இந்தியா,அமெரிக்கா, கொலம்பியா, கானா. முதல் நாளான நாளை இந்தியா தனது முதல் போட்டியில் டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் அமெரிக்காவை சந்திக்கிறது. 9ம் தேதி கொலம்பியாவையும், 12ம் தேதி கானாவையும் இந்தியா சந்திக்கிறது. இப்போட்டிகளும் டெல்லியிலே நடைபெற உள்ளது. இந்தியா இப்போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு மிக குறைவு என்றாலும் இந்தியாவில் கால் பந்து விளையாட்டு பிரபலமாகவும் இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
B பிரிவு - பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி
C ரிவு - ஈரான், குயினா, ஜெர்மனி, கோஸ்டாரிகா
D ரிவு - வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்
E பிரிவு - ஹோண்டுராஸ், ஜப்பான், நியூ காலடோனியா, பிரான்ஸ்
F பிரிவு - ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



