இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. அதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. புவனேஷ்வர்குமார் சிறப்பாக பந்து வீசி 5 ஓவர்களில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். புவனேஷ்வர்குமார் தனது முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதன் பிறகு தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணியும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. விஜய் ஒரு ரன்னிலும், தவான் 16 ரன்னிலும் மற்றும் கோலி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா 9 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 27 ரன்களுடன் விளையாடி வருகிறது. புஜாரா 5 ரன்னுடனும் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



