நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் வென்றது நியூசிலாந்து அணி. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி இன்று டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் T20 வெற்றியை பதிவு செய்துள்ளது. சர்வதேச டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை இதுவரை இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் இருவரும் மிகச்சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இருவரும் தல 80 ரன்கள் குவித்து அவுட் ஆகினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்தது. இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கோலி 26 ரன்களுடனும், கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணியில் அதிக பட்சமாக டாம் லேதம் 29 ரன்களும், கேன் வில்லியம்சன் மற்றும் மிட்சேல் முறையே 28 மற்றும் 27 ரன்கள் குவித்தனர். ஆஷிஷ் நெஹ்ரா இந்த போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



