சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தவருடமும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் இறுதியாக பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார். அவரை பஞ்சாப் அணி ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. அதற்காக தான் அஸ்வினை அதிக விலை கொடுத்து ஏல எடுத்துள்ளது எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் போட்டியில் அஸ்வின், யுவராஜ் சிங், ராகுல் மற்றும் ஃபின்ச் அகியோர் இருந்தாலும், அஸ்வினுக்கு கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் அணியின் பெயரும் மாற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



