Show all

ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா, டெஸ்ட் போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அனைத்து அணியிலும் இடம் பிடித்தார்.

இதுவரை ரெய்னா, 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5ஆயிரத்து 500 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும். இது மட்டுமல்லாமல் மூன்று விதமான போட்டிகளிலும் சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் ரெய்னா பெற்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.