சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது அடுத்த போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் தொகுப்பாளர்களாக அடிபட்டது. இதில் சிம்பு தான் கண்டிப்பாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தார்கள். அடுத்த பருவத்திற்கும் கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை, என்று பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பிக் பாஸ் பருவம் 4 தொகுப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,281.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் இரண்டு பருவங்கள் முடிந்து தற்போது மூன்றாவது பருவமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, செரின், தர்சன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் தலைப்பை வெல்ல மிகச் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடியவிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



