20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் திரைப்படத்தின் இணையத்திற்கான பதிப்பை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் மீண்டும் கீச்சுவில் பதிவிட்டிருக்கிறது. முருகதாஸ், விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சர்கார் திரைப்படத்தை இணையதளத்திலும், கம்பிவடத் தொலைக்காட்சி இயக்குவோரும் வெளியிடக்கூடாது என அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் சர்க்கார் படத்தை விரைவில் உயர்பதிப்புத் தரத்தில் வெளியிட உள்ளோம் என டிவிட்டரில் நேற்று பதிவிட்டது. இதற்கு சவால் விடும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் முடிந்தால் செய்து பாருங்கள் என கூறியிருந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ் ராக்கர்ஸ் பெயரில் கீச்சுவில் சர்கார் படத்தின் உயர்தரப்; பதிப்பு இன்றே வெளியாகும் என்று மிரட்டல் விடுத்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



