Show all

தமிழ் திரையுலக பிரபலங்கள் ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு வழங்கிய நிதி 57இலட்சம்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு துறையை உருவாக்கி, மாணவர்களின் ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக கடந்த ஆண்டிலிருந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டினர்.

தமிழ்த் திரையிலிருந்து அதற்காக முதலில் குரல் கொடுத்தவர் மறைந்த கவிஞர் நா முத்துக்குமார். கடந்த ஆண்டு டல்லாஸ், சியாட்டல், ஆஸ்டின் நகரங்களில் நடந்த தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பின்னர் ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதி அளிப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அதற்கான முயற்சிகளை ஊக்குவித்தார். நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட அமெரிக்கா சென்றபோது, தான் திரட்டிய நிதியிலிருந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ 10 லட்சத்தைத் தந்தார். கடந்த மாதம் அமெரிக்கா கனடாவில் இசைக் கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சீனிவாஸ் ஆகியோர், கச்சேரியில் வசூலான பணத்திலிருந்து ரூ 16.33 லட்சத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வழங்கினர்.

அடுத்து நடிகர் சங்கப் பொதுச் செயலர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ரூ 10 லட்சம் வழங்கினார்.

நடிகர் கருணாஸ் தன் பங்குக்கு ரூ 1 லட்சம் வழங்கி மற்றவர்களையும் நிதியளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் நடிகர் கமல் ஹாஸன். அவர் இன்று ரூ 20 லட்சத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ரூ 55 லட்சத்துக்கும் மேல் தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.