ஹிந்தி திரையுலகம் விரும்பும் நடிகையாக சாதிக்கும் முயற்சியில், முதற்கட்டமாக தன்னை ஒல்லி பெல்லியாக்கிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னிந்திய மொழிகளில் முதன்மை கதைத்தலைவிகளில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வணிகவியலாக வெற்றி தரும் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக்கதை திரைப்படமான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.
இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்தப் படத்தை மறைந்த நடிகை சிறிதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 'பதாய் ஹோ' படத்தின் இயக்குனர் அமித் சர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தியில் ஒல்லியாக நடிகைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகைக்காக, நடிகை கீர்த்தி சுரேஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறும் முயற்சியில் படுமும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



