Show all

ஹேமமாலினியின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து பதிவுகள்

மதுரா கலவரம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக பாராளுமன்றஉறுப்பினர் ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை சுட்டுரைத் தளத்தில் வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதலில் 2 காவல் அதிகாரிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். 124 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக பாராளுமன்றஉறுப்பினர் ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை சுட்டுரைத் தளத்தில் வெளியிட்டார். இது ஹேமமாலினியின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கியுள்ளார்.

அதாவது, முகநூல் மற்றும் சுட்டுரையில் ஹேமமாலினியின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து பதிவுகள் கொட்டப்பட்ட நிலையில், அவர் தனது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட படங்களை நீக்கினார்.

இதனிடையே மதுராவில் நடந்த கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம் என அத்தொகுதி பாராளுமன்றஉறுப்பினர் ஹேமமாலினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரா தொகுதி பாராளுமன்றஉறுப்பினர் ஹேமமாலினி,

மதுரா சம்பவம் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. காவல்துறையினரும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக உ.பி. மாநில அரசு இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது ஏன்?

     நடந்த சம்பவத்துக்கு உத்தரப் பிரதேச அரசின் அலட்சியமே காரணம். முதல்வர் அகிலேஷ் யாதவிடம் நான் கேள்வி எழுப்புவேன். மதுரா சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும் எழுதவிருக்கிறேன

எனக் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.