Show all

நடிகர் விஜய்க்கு சுகாதாரத்துறை கவனஅறிக்கை! சர்கார் பட சுவரொட்டியை உடனடியாக நீக்கவேண்டும்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் வெளியான சர்கார் பட முதல்பார்வை சுவரொட்டியில், நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்தச் சுவரொட்டிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் அந்த புகைப்பிடிக்கும் காட்சியை வெளிப்படுத்தக்கூடிய அந்த சுவரொட்டியை எல்லா இணையதளத்திலிருந்தும் நீக்கவேண்டும் என சன் பிக்க்சர் தலைவர் கலாநிதிமாறன், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தமிழக சுகாதாரதத்துறை பிரிவில் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் அந்த கவனஅறிக்கையில், புகையிலை பயன்பாட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் திரைத்துறையும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,840.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.