Show all

உண்மை என்றே நம்புவோம்! படிப்புக்காக நடிப்புக்கு விடுப்பு விட்டுள்ளாராம் நிவேதா தாமஸ்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிவேதா தாமஸ், குழந்தை நடிகையாக மலையாளப் படங்களில் நடித்து, பின்னர் கதைத்தலைவியாக அறிமுகமானவர். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'போராளி' படம்தான் தமிழில் அவருக்கு முதல் படம். தற்போது தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திவரும் நிவேதா தாமசுக்கு, ஜெய் லவகுசா தான் கடைசியாக நடித்த தெலுங்குப் படம். அதன்பின் தேர்வு எழுதுவதற்காக சில மாதங்கள் நடிப்புக்கு விடுப்பு விட்டுள்ளார்.

இந்நிலையில், 'என்னுடைய அடுத்த பட அறிவிப்பு குறித்து எல்லா ரசிகர்களும் கேட்கின்றனர். ஜெய் லவகுசாவுக்குப் பிறகு என்னுடைய கடைசி தேர்வு எழுதுவதற்காக விடுப்பு விட்டுள்ளேன். விரைவில் அடுத்த பட அறிவிப்பு வரும்' என கீச்சுவில் பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.