08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் கதைத்தலைவியாக அறிமுகமானார். அதன் பின் வந்த நல்ல வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது அதிகமாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சர்கார்', 'சண்டக்கோழி 2' உட்பட பல படங்களில் அவர் கெட்டவள் பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் தொடர்ந்து அவரது சந்தை உயர்ந்து வருகிறது. இவர் நடிகர் விசாலை காதலித்து வருகிறார் என்று ஓரிரண்டு ஆண்டுகளாக ஒரு செய்தி உலாவந்தது. அண்மையில் நடிகர் விசால் தன்னுடைய திருமணம் பற்றி வெளிப்படையாக கூறியதால்தான் இவர்களின் காதல் கிசு கிசு ஒரு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார். 'நான் என் காதலைச் சொல்வதென்றால் அது 'பாகுபலி' பிரபாசிடம் தான் சொல்வேன்' என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,069.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.