Show all

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்புக்கு முழுக்காம்! இனி இயக்குநராம்: மலையாளத்தில்.

தனுசுடன் நடித்து, கொடி படம் மூலம் திரையுலகில் நமக்குத் தெரிந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இயக்குனராக மாற இருக்கிறாராம். 

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். விரைவில் இயக்குனராகவும் மாற இருக்கிறாராம்.

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் வேலையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருக்கும் அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டுவிட்டு துணை இயக்குநராக பொறுப்பெடுத்திருக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,177.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.