Show all

அஜித்தின் அடுத்து வரும் படம் ஏகே60! அதற்காக பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம்.

அஜித்தின் அடுத்த படம் ஏகே60 என்றவுடன் ஏகே47 மாதிரி ஏதோ துப்பாக்கி என்று உங்கள் கனவுக் குதிரையை தட்டி விட்டு, ஏதோ போராளியின் கதை போல என்று, உலகின் பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம். அறுபதுக்குப் பொருள் அஜித்தின் அறுபதாவது படம் என்பது. ஏகே என்பதற்கு என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித் பைக் பந்தய வீரராக நடிக்கவுள்ள  அஜித்தின் அறுபதாவது படம் அவரின் கடந்த கால வாழ்க்கையை சுவையாகச் சொல்லும் வகையில் உருவாக உள்ளது. ஏகே60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் பணிகளுக்காக அண்மையில் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

மேலும் தற்போது கிடைத்துள்ள தகவல் ஒன்றின்படி இப்படத்தில் பிக்பாஸ் பருவம் 3 ல் இருந்து அண்மையில்  வெளிவந்துள்ள ரேஷ்மா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள இந்தத் தகவல் பற்றி கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.