Show all

ஒரு முதன்மைக் குறிப்பு! உங்கள் செல்பேசியின் மின்கலத்தை நீண்ட காலம் பாதுகாக்க

உங்கள் செல்பேசியின் மின்கலத்திற்கு மின்னேற்றம் செய்வதில் சில வழிமுறைகளை பின்பற்றினால், மின்கலத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் செல்பேசியின் மின்கலத்தையும் செல்பேசியையும் நீண்ட காலத்திற்கு பாதுகாத்திட வாழ்த்துக்கள்.

16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: உண்மையில் நம்முடைய செல்பேசி அதிகமாக பயன்படுத்தி அது பழையதாகும் போது அதனுடைய மின்கலத் திறனும் குறைகிறது. ஆனால் நாம் செல்பேசி வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே மின்கலம் தொடர்பான சிக்கல் வருகிறது என்றால் பேசியின் அமைப்பில் அல்லது நாம் மின்னேற்றம் செய்யும் முறையில் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். 

செல்பேசியை சிறிது சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்வது தவறான அணுகுமுறை ஆகும். இன்றைய நவீன மின்கலம் மூவசை மாழையும் இரும்பும் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் ஆனது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை வரும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை மின்னேற்றம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் மின்கலத் திறன் இருபது விழுக்காடு வரை குறைந்து விடும்.

நமது பேசியில் முழுமையாக மின்னேற்றம் செய்த பின்பு அதன் மின்கலத்திறன் 20விழுக்காட்டுக்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் மின்னேற்றம் செய்ய வேண்டும். 

மின்னேற்றத்தில் இருக்கும் செல்பேசியை அடிக்கடி மின்னேற்றத்தில் இருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

உங்கள் செல்பேசியின் மின்கலம் நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில் அதில் மின்னேற்றம் 20 விழுக்காட்டிற்கு  குறைவாகவோ அல்லது 80 விழுக்காட்டிற்கு அதிகமாகவோ இருக்கும் போது மின்னேற்றம் செய்யக் கூடாது. 

மூவசை மாழை (லித்தியம்) மற்றும் இரும்பு கொண்டு உருவாக்கப்படும் மின்கலங்களை அடிக்கடி முழுமையாக மின்னேற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு அடிக்கடி முழுமையாக மின்னேற்றம் செய்யும் பட்சத்தில் அவை அதிக சூடாகி வலுவிழக்கும்.

அதேசமயம் மின்கலத்தின் மின்னேற்ற விழுக்காடு சுழியத்திற்கு  வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு சுழியத்திற்கு வரும் வரை நாம் செல்பேசியை மின்னேற்றம் செய்யாமல் இருந்தாலும் மின்கலத்தின் திறனும் குறைந்து விடும். எனவே முடிந்த அளவு மேலே கூறிய அளவீட்டிலேயே நாம் செல்பேசியை மின்னேற்றம் செய்ய வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,568.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.