Show all

10 வயது சிறுவனுக்கு, முகநூல் நிறுவனம் 10 ஆயிரம் டாலர் வெகுமதி

புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான முகநூல் நிறுவனம் 10 ஆயிரம் டாலர் வெகுமதி அளித்துள்ளது.

தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு முகநூல் நிறுவனம் வெகுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜானி என்ற 10 வயது சிறுவன், முகநூல்; நிறுவனத்துக்குச் சொந்தமான புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்துக்குள் வெற்றிகரமாக ஊடுருவி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை 13 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.

எனினும், அந்த வலைதளத்தில் இணையாமலேயே அதற்குள் ஊடுருவி, அதில் பயன்பாட்டாளர்கள் செய்துள்ள பதிவுகளை அழிக்கக் கூடிய உள்ளீட்டை ஜானி உருவாக்கியதால் அவர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 அந்தச் சிறுவன் கண்டுபிடித்த குறைபாட்டை முகநூல் தற்போது சரி செய்துள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.