Show all

தமிழ்நாட்டுப் பகுப்பாய்வுக் கூடத்தில் ஏற்பாடு! இனி உருமாறிய குறுவி வகைகளை விரைவாகக் கண்டறிய முடியும்

உருமாறிய கொரோனா குறுவிகளை தமிழ்நாட்டிலேயே கண்டறியும் வகையில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொடக்க நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை அண்ணாசாலை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வு கூடத்தில் உருமாறிய கொரோனா குறுவிகளைக் (வைரஸ்) கண்டறிய முடியும். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்;துள்ளது.

இந்த வகைக்கு ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்றிருப்பதாகத் தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனால் உருமாறிய கொரோனா குறுவிகளை தமிழ்நாட்டிலேயே கண்டறியும் வகையில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொடக்க நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தற்போது, உருமாறிய குறுவிகள் பாதிப்பை கண்டறிவதற்காக புனேவில் உள்ள ஒன்றிய குறுவியியல் நிறுவனம் மற்றும் பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு, முடிவுகள் பெறப்படுகின்றன. இதற்கு மிகவும் கால தாமதம் ஆகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.