Show all

நான்கு நாட்கள் பள்ளிகள் விடுமுறை! உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க பள்ளி கல்வித்துறைக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், அரசிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளையும் 2ம் கட்ட தேர்தல் சனிக்கிழமையும் நடைபெறுகின்றது

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் மற்றும் தற்செயல் தேர்தல் நடைபெறும் 28 மாவட்டங்களில் நாளை புதன் மற்றும் சனிக்கிழமை என இரு நாட்கள் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,027.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.