Show all

ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்! ஒன்றிய அரசின் கல்வித்திட்ட தேர்வுகளில்

ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான, இடைநிலை கல்வி வாரிய பருவத் தேர்வுகளில் ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பல பள்ளிகளில்- ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான, இடைநிலை கல்வி வாரிய பருவத் தேர்வுகளில் ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. 

ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான இடைநிலைக் கல்விவாரிய பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான மையங்களாக அந்தந்த பள்ளிகளே அறிவிக்கப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் அதிகாரம் வழங்கியது ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான இடைநிலைக் கல்விவாரிய நிர்வாகம்.

இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களாக பள்ளிகளின் முதல்வர்களே இருந்தனர். இந்த நிலையில்தாம் முறைகேடுகள் நடந்துள்ளனவாம். பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களை நூதன வழிகளில் முறைகேடுகள் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது கேள்வித்தாள்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு கசிய விட்டிருக்கிறதாம் பள்ளி நிர்வாகம். 

ஒரே மையில்தான் தேர்வு எழுத வேண்டும்; தெரியாத வினாக்களுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு அறிவுறுத்தியது. சந்தேகத்துக்குரிய வினாக்களுக்கு சில ஆலோசனைகளும் கொடுத்துள்ளனர். தங்களது பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இத்தகைய முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான இடைநிலைக் கல்விவாரிய நிர்வாகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான இடைநிலைக் கல்விவாரிய நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால்- ஒன்றிய அரசின் கல்வித்திட்டமான இடைநிலைக் கல்விவாரிய முதல் பருவ தேர்வுகள் களையப்படக் கூடும் என்கின்றன கல்வித்துறை வட்டாரங்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.