Show all

என்ன ஆயிற்று எடப்பாடியாருக்கு! மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகளே இருக்காதா? என்ன சொல்கிறார் எடப்பாடியார்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அடுத்த ஒன்றியத் தேர்தலுக்குப்பின்  திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்கின்றாரே எடப்பாடி பழனிசாமி? என்ன ஆயிற்று அவருக்கு? என்பதான வினாக்கணைகள் எடப்பாடியாரை நோக்கி எய்தப்பட்டு வருகின்றன.

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அடுத்த ஒன்றியத் தேர்தலுக்குப்பின்  திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்கின்றாரே எடப்பாடி பழனிசாமி? என்ன ஆயிற்று அவருக்கு?

இந்தியாவில் அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்து அவர்கள் அறுதிப் பெரும்பான்மையில்- ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்னெடுத்தால், இந்தியாவில் பாஜக ஒருகட்சி ஆட்சி மட்டுமே என்பதாகவல்லவா முன்னெடுக்கும் ஒன்றிய ஆட்சியை பாஜக. மாநில ஆட்சிகளே இருக்காதே! 

அதுசரி எடப்பாடியாரின் இந்தக் கனவை பாஜக முன்னெடுப்பதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எப்படி இடம் கொடுக்கும்? 

தமிழ்நாட்டு பாஜகவினர்கள் மாதிரியே எடப்பாடியாரும் பேசத்தொடங்கியது ஏன்? தோல்விக் காய்ச்சலில் அவருக்கு ஏதாவது ஆகி விட்டதா?

அவல்பொரியை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாகவல்லவா இருக்கிறது எடப்பாடியாரின் இந்தப் பேச்சு. மாநிலக் கட்சிகளே இருக்காது என்றால் எடப்பாடியாருக்கு தமிழ்நாட்டு அரசியலில் என்ன வேலை? 

எடப்பாடியாரின், 'ஒன்றிய பாஜக அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்' என்ற பேச்சுக்கு இப்படியான பலவகை வினாக் கணைக்கள் எடப்பாடியாரை நோக்கி எய்தப்பட்டு வருகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.