Show all

புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறப்பு! அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் புதியம்கிழமையிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதியம்கிழமையிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகள் நலங்குப்பாதுகாப்புடன் பள்ளிகளில் பயில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நலங்குத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

கொரோனா குறுவிப் பரவல் காரணமாக ஒன்னரை ஆண்டுகளாக முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கொரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள், இந்திய அளவில் ஒன்றிய இடைநிலை கல்வி வாரியப் பள்ளித் தேர்வுகள் நடத்தப்பெறாமலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே இயங்கலை வகுப்புகளில் ஈடுபட்டு வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருக்கும் மாணவர்கள் உடல், மன அடிப்படைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக், கொரோனா சூழலில் வீட்டில் இயங்கலை மூலம் கற்கும் குழந்தைகள் வீட்டில் சோர்வாக இருந்தாலும், பள்ளிகளில் சேர்வதால் ஏற்படும் அபாயங்களைப் பார்ப்பது கட்டாயம். நாம் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் கற்கும் சூழல் பற்றி பேசும் நாம், நாம் அபாயங்களையும் பார்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருக்கும் சூழலில் ஆசிரியர்களில் 90.11 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நலங்குத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.