Show all

பாமக நிறுவனர் இராமதாஸ் கீச்சுப்பதிவு! தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் கைது கொடுமைக்கு ஒன்றிய அரசிடம் முடிவு கேட்டு

இன்று கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார், பாமக நிறுவனர் இராமதாஸ்.

01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய  மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவுவே இல்லையா என்று பாமக நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் இராமதாஸ் தனது கீச்சுப் பக்கத்தில், தமிழ்நாட்டின் கிழக்குக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்தத் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

கடந்த மூன்று மாதங்களில் சிங்களப் கடற்படையினரால் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது.

இன்று கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் கைது கொடுமைக்கு ஒன்றிய அரசிடம் முடிவு கேட்டு பாமக நிறுவனர் இராமதாஸ் கீச்சுப்பதிவிட்டுள்ளார். இது பாராட்டிற்கு உரிய பதிவுதான். ஆனால் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் பாஜக, காங்கிரசுக்கு முடிவுகட்டி- மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை சாத்தியப்படுத்தினால்தான்- பாமக நிறுவனர் இராமதாஸ் கீச்சுப்பதிவில் கேட்ட முடிவு சாத்தியமாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,158.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.