Show all

ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின், மறுபக்கம் ஆர்.என்.ரவி! திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடியில் தெரிவித்த குறளின் விரிவாக

தமிழ்நாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கிற பொறுப்பை, ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர் தெரிவு செய்கிற நடைமுறை இருந்து கொண்டிருப்பது, தமிழர்தம் செயலற்ற நிலையில் தமிழ்மண்ணுக்கு அமைந்திட்ட ஊழ் ஆகும். தெள்ளியர் ஒருங்கிணைந்து வெற்றிபெறுவோம்.

13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடியில் தெரிவித்த குறளின் விரிவாக ஒரேபோதில் சென்னையிலும் உதகையிலும் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன இரண்டு நிகழ்ச்சிகள்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு
என்பது அந்தக் குறள். குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன தெரியுமா? ஊழ் என்கிற அதிகாரம். 

உதகையில் நடந்தது அதிகாரத்தில் இருப்பவர்களின் கூட்டம். அறிவை விற்பனை செய்வதற்கு, அதிகாரத்தால் களவாடிக் கொண்ட செல்வ வளமையின் கூட்டம். ஒன்றிய அரசின் ஆதிக்கப்பாடன நியமனத்தில் ஆளுநராக அனுப்பப்பட்டவரின் கூட்டம். 

சென்னையில் நடந்தது உரிமை இழந்தவர்களின், உடைமை இழந்தவர்களின்- உரிமை கோரலுக்கான, உடைமை மீட்டலுக்கான சட்ட முன்வரைவு முன்னெடுப்;புக் கூட்டம். 

தமிழ்நாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கிற பொறுப்பை, ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர் தெரிவு செய்கிற நடைமுறை இருந்து கொண்டிருப்பது, தமிழர்தம் செயலற்ற நிலையில் தமிழ்மண்ணுக்கு அமைந்திட்ட ஊழ் ஆகும்.

தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று பதிகை செய்யப்பட்டது. இது திருவள்ளுவர் சுட்டும் தெள்ளியர் கூட்டம்.

இங்கே சட்டமன்றத்தில் முதல்வர் பேசி முடிச்சதும், அங்கே உதகை உல்லாசக் குளிரில், ஆளுநர் மாளிகை வெளியிட்ட நிழற்படம்: ஒன்றிய பாஜக அரசு நியமித்த ஆளுநர் ரவி உதகையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மாநாடு நடத்தி வருகிறார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. செல்வவளம் (திருவள்ளுவர் தெரிவிக்கும் திரு) மிக்கவர்களின் ஆதிக்கப்பாட்டை நிலைநிறுத்தும் வகைக்கான நிகழ்வு ஆகும்.

தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆளும் திமுக அரசு இதற்கான திட்டத்தில் இருந்த நிலையில் இன்று சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டது. 

இச்சட்டமுன்வரைவு பதிகையால், சட்டமன்றத்தின் அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெறித்து ஓடினர். அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் இந்தச் சட்டமுன்வரைவு நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவை பதிகை  செய்ததற்கான காரணம் (திருவள்ளுவரின் ஊழ் அதிகாரம்) குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். இங்கே முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்து, சட்டமுன்வரைவு மீதான வாக்கெடுப்பு உடனே நடத்தப்பட்டது. சில மணித்துளிகளில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. 

அதே நேரத்தில்தான், உல்லாச உதகையில், துணை வேந்தர்களை அழைத்து, ஆளுநர் சந்திக்கும் கூட்டமும் நடைபெற்றது. இங்கே சட்டமன்றத்தில் ஆளுநர் ஆதிக்கப்பாட்டிற்கு எதிராக சட்டம் பதிகை செய்யப்பட்ட அதே நேரத்தில்தான் உதகையில் துணை வேந்தர்களை அழைத்த மாநாட்டில் பல்வேறு துணை வேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை செய்து கொண்டு இருந்தார். 

இந்த நிகழ்வில் ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் துணை வேந்தர்கள், அதிகாரிகள் உட்பட 33 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மொத்தம் 2 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. பல்வேறு பாடுகள் இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில், தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே வேளையில் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிரடிப் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆளுநர் ரவி துணை வேந்தர்களுடன் இருக்கும் புகைப்படம் ஆகும் அது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,230.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.