Show all

தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி! முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 அகவை உடையவர்கள் 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் (15 முதல் 18 அகவை) கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 அகவை உடையவர்கள் 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அப்போது, மாந்தோப்பு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 15 முதல் 18 அகவையுடைய 33.20 லட்சம் பேரில் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். இதற்காக, அனைத்து பள்ளிகளிலும் நலங்குத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உள்ளன. இதுதொடர்பாக பள்ளி கல்வி, உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு லட்சம் பொறியியல் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 46 விழுக்காட்டினர் முதல் தவணையும், 12 விழுக்காட்டினர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். இரண்டாம் தவணை செலுத்தாத மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.