Show all

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்! பொங்கலில் இருந்து தொடங்கலாம்...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் அறிவிப்பை, பெரும்பாலும் வரும் பொங்கல் அன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு சில மாதங்களாக செய்து வந்தது. எங்கிருந்து நிதி திரட்டி மாதம் 1000 ரூபாய் கொடுப்பது, இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. 

இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு செலவை செய்வது அரசுக்கு மாபெரும் பொருளாதார நெருக்கடியாக அமையும் என்பதால், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துகிறவர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் PHH-AYY,  PHH, NPHH குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S,  NPHH - NS  குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலும் வரும் பொங்கல் அன்று முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. பெரிய விழா எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,100.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.