Show all

படர்கிறது பழைய மோசடிப் புகாரும்! கைதாகியுள்ள வலையொளி காட்சிமடையாளர் மாரிதாஸ் என்கிற பாஜக பேரறிமுகம்மீது

கைதாகி சிறையில் உள்ள வலையொளி காட்சிமடையாளர் மாரிதாஸ் என்கிற பாஜக பேரறிமுகத்தின் மீது- கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கின், கைதும்- தற்போது அவர் மீது பதிவாகிறது.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கைதாகி சிறையில் உள்ளார், வலையொளி காட்சிமடையாளர் மாரிதாஸ் என்கிற பாஜக பேரறிமுகம்.

குன்னூர் உலங்கி விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்த நிலையில், தமிழ்நாடு அரசை சர்ச்சைக்குரிய வகையில் திறனாய்பு செய்த மாரிதாசை மதுரையில் காவல்துறையினர் கைது செய்தனர். 

அந்த வழக்கில் மாரிதாஸை 8,மார்கழி வியாழன் வரை (டிசம்பர் 23) அறங்கூற்றுமன்றக் காவலில் வைக்க அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. மாரிதாஸ் கைதை பாஜகவினர் துணுக்குற்று வரும் நிலையில், தற்போது இரண்டாவது வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த முறை மாரிதாஸ் மோசடி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைதாகி சிறையில் உள்ள வலையொளி காட்சிமடையாளர் மாரிதாஸ் என்கிற பாஜக பேரறிமுகத்தின் மீது- கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கின், கைதும்- தற்போது அவர் மீது பதிவாகிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் தொடர்பாக, அந்த நிறுவன தலைமையிடம் அளித்த புகாரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளிக்கப்பட்டதாக மின்னஞ்சல் ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டிருந்தார். 

ஆனால் அந்த மின்னஞ்சல் போலியானது என தொடர்புடைய நிறுவனத்தின் இணை செயல் ஆசிரியர் வினய் சரவாகி புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், போலி ஆவணம் உருவாக்குதல், மோசடி செய்தல் என பிரிவு 465, 469 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பப்பட்டது. அந்த வழக்கில், மாரிதாஸை காவல் துறையினர் தற்போது கைது நடவடிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டாவது வழக்கில் மாரிதாஸ் கைது பதிவு குறித்து அவர் சிறையில் உள்ள உத்தமபாளையம் சிறைக்கு சென்று காவல்துறையினர் தெரிவித்ததாகவும், மேலும் அவரின் உடன்பிறப்பு மகேசிடமும் மாரிதாஸ் இரண்டாவது கைது பதிவு தெரியப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாரிதாஸை எப்படியும் வெளியே கொண்டு வர வேண்டும் என்று தமிழக பாஜகவினர் முயன்று வரும் நிலையில், அடுத்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. எனவே, மாரிதாசை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் அதிகரித்துள்ளது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.