Show all

திமுகவை கொண்டாடும் தமிழ்நாடு! திமுகவிற்கு மாபெரும் வெற்றி. திமுகவை முதன்மையாக சாடிவந்த நாம்தமிழர், தேமுதிக, மநீமவுக்கு சறுக்கல்

மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் கெத்து காட்டி வந்த தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று முன்னோக்கி நகராமல் இருப்பது பின்னடைவாகக் கருதப்பட்டு அதற்கான காரணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: அண்மைக் காலமாக, ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கிற கட்சிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கங்கணம் கட்டிக் கொண்டு களமாடி வருகிறது. 

அந்த வகையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுக்கிற கட்சிகளில் முதன்மை பெற்றிருந்த அதிமுகவுக்கு மாபெரும் வீழ்ச்சியைக் கொடுத்து- ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தமிழ்நாட்டில் களம் அமைந்து விடாமல் காத்து வந்த திமுகவிற்கு ஆட்சியையும் கொடுத்தது தமிழ்நாடு.

அதோடு விட்டு வைக்காமல்- ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தமிழ்நாட்டில் களம் அமைந்து விடாமல் காத்து வந்த திமுகவிற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை மீண்டும் உரித்தாக்கியுள்ளது தமிழ்நாடு.
மேலும்- மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில் கெத்து காட்டிய தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சறுக்கலாக அமைந்துள்ளது. அவைகள் தேவையே இல்லாமல் திமுகவை எதிர்ப்பதில் முனைப்பு காட்டியதால்- அந்த கட்சிகளுக்கு தமிழ்நாடு தந்த தீர்ப்பு இந்தச் சறுக்கல் என்று பேசப்படுகிறது.

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிகவும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கனிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்த நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது? ஏன்? என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு தேர்தல் அரசியலில், திமுக, அதிமுக, மதிமுக, பாமக, விசிக, ஆகிய தமிழ்நாட்டுகான கட்சிகளும், சிலபல குறுகிய நோக்கங்களை இந்தியாவின் அதிகாரத்தில் நிறுத்துவதற்காக ஒன்றிய ஆட்சிக்கு முனைந்து வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பாஜக ஆகிய கட்சிகளும் மட்டுமே செயல்பட்டு வந்தன. 

தமிழ்நாடு தேர்தல் அரசியலில், புதிய அரசியல் கட்சிகள் வரவும் நடந்துள்ளது. குறிப்பாக, விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்ட தேமுதிகவும், சீமான் தலைமையில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும் கமல்ஹாசன் தலைமையில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் அரசியலுக்கு வந்தன.


தேமுதிக 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. அப்போது தேமுதிக தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதற்குப் பிறகு, தேமுதிகவுக்கு தேர்தல் அரசியலில் இறங்குமுகமாகவே அமைந்து வருகிறது. இந்த தேர்தலில் தேமுதிக நகராட்சி வார்டுகளில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதே போல, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பாஜகவுக்கு கடுமை காட்டிய போது, சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கனிசமான வாக்கு விழுக்காட்டைப் பெற்று அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 

ஆனால், தற்பொழுது நாம் தமிழர் கட்சி, பல நகர்வுகளில் பாஜகவை கட்டிக்காத்தும், திமுகவை மட்டும் சாடி வந்த நிலையில்- இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதே போல, மக்களவைத் தேர்தலில், குறிப்பிடும் படியான வாக்கு விழுக்காட்டைப் பெற்ற கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் செல்வாக்கு இருப்பதாகக் பேசப்பட்டது. ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிபிடும்படியான வெற்றிகள் பெறாததால் நகர்ப்புறங்களில் அதனுடைய செல்வாக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் கெத்து காட்டி வந்த தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று முன்னோக்கி நகராமல் இருப்பது பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

பெரும்பாலும் இந்தக் கட்சிகள் பாஜகவின் அடாவடிகளைக் கண்டும் காணாமல் திமுகவை மட்டுமே சாடி வந்தமையே தமிழ்நாடு இவர்களை புறக்கணித்தமைக்கான காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கட்சிகள் இனியாவது தமிழ்நாட்டின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு, எப்போதும், தமிழ்நாட்டுக்கு எதிராகவே அடாவடிகளில் ஈடுபட்டுவரும் பாஜகவுக்கு, தக்க பதிலடிகளைக் கொடுத்து தமிழ்நாட்டின் வளர்ச்சி நோக்கங்களுக்கு களமாட வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,168.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.