Show all

வதந்திகள் வேண்டாமே- ஒமைக்ரான் குறுவி குறித்து! நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

ஒமைக்ரான் குறுவி குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒமைக்ரான் வராமல் இருக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தவறாமல் முகக்காப்பு அணிய வேண்டும். இதை தவறாமல் கடை பிடித்தால் நமக்கு பாதிப்பு வராது. என்று தெரிவிக்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 3-வது அலை வந்தாலும் வராவிட்டாலும் மருத்துவ கட்டமைப்பு நம்மிடம் வலுவாக உள்ளது. எனவே ஒவ்வொருவரும் உரிய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவைப்படாது.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் சூழல் எதுவும் இல்லை. ஆனாலும் இது தொடர்பாக உலக நலங்கு நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம்.

டெல்டா வகை கொரோனா குறுவியை (வைரஸ்) மரபு நூலிழையில் பெருக்கத் தொடர்வினை மூலமாக தலைகீழ் படியெடுத்தல் (ஆர்.டி. பி.சி.ஆர்) என்கிற பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ஆனால் ஒமைக்ரான் குறுவியைக் கண்டறிய, மரபு நூலிழையில் பெருக்கத் தொடர்வினை மூலமாக தலைகீழ் படியெடுத்தல் பரிசோதனை மட்டுமின்றி மரபணு பரிசோதனையும் செய்து தான் ஒருமுடிவுக்கு வர முடிகிறது.

அதனால்தான் அதுவரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனையில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கொடுக்கல், வாங்கல் வகைகளை எவ்வளவு குறுகிய வட்டத்திற்குள் முடித்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு வாதம் வம்பு வழக்குகள் இல்லை என்பது அனுபவப் பொன்மொழி ஆகும். வட்டத்தை விரிவு படுத்தும் போது ஆதாயம் கூடுதல் ஆக இருந்தாலும் ஆபத்தும் கூடவே வரும் என்பதுதாம் தற்போது நாம் அனுபவித்து வரும் கொரோனா குறுவி திரிபடைந்த ஒமிக்ரான் குறுவி என்பதெல்லாம். 

உள்ளூரில் விலைபோகாத மாடு வெளியூரில் விலைபோகுமா என்கிற அழகான தமிழ்ப்பழமொழி உண்டு. ஆனால் நாம் நிலத்தை பண்படுத்தினால் நம் பிள்ளைகள் நலமாக வாழும் என்பதுதாம் நடைமுறை. ஆனால் நாம் நமக்கே வாழ்வு தேடி- நிலம் திருத்த வேண்டிய நாம் நிலத்தைக் குறையாய் காட்டி-

சொந்த நாடு உருப்படியா இருந்தா, வேற நாட்டுக்கு ஏன் போகணும்?
படிச்ச படிப்புக்கு தொழில் இல்ல
தொழில் செய்யப் போனால் போதுமான சம்பளம் இல்ல
அரசியல் குளறுபடி
பணம் இருக்கிறவனுக்கும் செல்வாக்கு இருக்கிறவனுக்கும் எல்லாமே திறந்த வழி
முட்டி மோதி மேல வாருகிறவனுக்கு - எல்லாமே முட்டுக்கட்டை
சாதி மத குழப்பம் காட்டி - மூளைசாளிகளையும் வெளியே துரத்துறது
இக்கரையில புல் பசுமேய இல்லாவிட்டால் அக்கறைக்கு மாடுகள் செல்வது இயல்பு. தாண்டிச்செல்லத்தான் செய்யும் அது தவறில்ல

என்று உதிரி உதிரியாய் அயலை நோக்கி பயணித்ததன் விளைவே நாம் தற்பொழுது எதிர்கொண்டு வருகிற கொரோனா குறுவி திரிபடைந்த ஒமிக்ரான் குறுவி என்பதெல்லாம். கொடுக்கல் வாங்கலை குறுகிய வட்டத்திற்குள் முடித்து முன்னேற நாம் முதலாவதாக கையில் எடுக்க வேண்டியது:- தாய்மொழி வழிக்கல்வி! தமிழே அடையாளம் என்று விழிப்படைதலே ஆகும். 

நாம் முதலாவதாக முன்னெடுத்ததும், பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னெடுத்து வருவதும்- தமிழில் வடமொழிச்சொற்கள் என்ற கொரோனா. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் என்கிற திரிபடைந்த ஒமிக்ரான்கள்தாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.