Show all

தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் ராவலி எச்சரிக்கை! மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் எதுவும் இல்லை

மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் என்று சில மதவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில மதவாத அரசியல் தலைவர்களும் இதே விடையத்தைக் குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக உறுதிப்படுத்த முடியாத செய்தியை வதிந்தியாக முன்னெடுத்து வருகின்றனர்.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5123: பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில் பள்ளியின் விடுதிக்காப்பாளர் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் எதுவும் இல்லை என்று தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராவலி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விடுதிக்காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மாணவி விடுதிக்காப்பாளர் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்று தெரியவருகிறது. விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் தான் மனம் உடைந்ததாகவும், தனக்கு தொடர்ந்து விடுதிக்காப்பாளர் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு அவர் அன்றாடம் பல விதங்களில் அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறி உள்ளார். தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தால் வேறு வழியின்றி பூச்சி மருந்தை குடித்ததாகவும் அந்த மாணவி மரணம் அடையும் முன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வழக்கில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அகவை அறுபத்தி இரண்டு உள்ள விடுதிக்காப்பாளரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

அந்த மாணவி பூச்சி மருந்தை குடித்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமான நிலையில் நேற்று முதல்நாள் பலியானார். இந்த நிகழ்வு தொடர்பாக தஞ்சை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் என்று சில மதவாத ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில மதவாத அரசியல் தலைவர்களும் இதே விடையத்தைக் குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக உறுதிப்படுத்த முடியாத செய்தியை வதிந்தியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட பாட்டில் அவரை யாரும் மதமாற்றம் செய்ய முயன்றதாக எந்த தகவலும் இல்லை என்று தஞ்சாவூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராவலி தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவியை மத மாற்றம் கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவியின் அடையாளங்களை வெளியிடுவது தவறு. குழந்தைகள், 18க்கு அகவைக்குக் கீழ் இருக்கும் பாதிக்கப்பட்டோர் யாருடைய புகைப்படம், பெயரையும் வெளியிட கூடாது. மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பெற்றோர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் எங்கும் மதமாற்றம் குறித்து அவர்கள் பேசவில்லை. மதமாற்றம் குறித்து அவர்கள் எங்கும் குறிப்பிடவில்லை. இதில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தஞ்சை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராவலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,135.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.