Show all

முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தது! உள்ளூர் மக்களின் ஆட்சி அதிகாரத்திற்கான ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்

ஒவ்வொருவரும், தலைவியாக. தலைவனாக உலாவருவதற்கு தமிழ்முன்னோர் வகுத்தளித்த திருமணத்தின் மூலமான, குடும்பம் மாதிரிச் சமுதாயமாக தமிழ் நாட்டில் சிறப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதுபோல சமூக ஆர்வலர்கள் தலைவனாகவோ தலைவியாகவோ ஊர் நிருவாகத்தை முன்னெடுக்க சட்ட சமூகம் அமைத்துக் கொடுத்திருக்கிற பெரு வாய்ப்பு உள்ளாட்சித் தேர்தல்.  

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொருவரும், தலைவியாக. தலைவனாக உலாவருவதற்கு தமிழ்முன்னோர் வகுத்தளித்த திருமணத்தின் மூலமான குடும்பம்- ஐயாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாக, சிறந்த மாதிரிச் சமுதாயமாக தமிழ் நாட்டில் சிறப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது. 

அதுபோல சமூக ஆர்வலர்கள் தலைவனாகவோ தலைவியாகவோ ஊர் நிருவாகத்தை முன்னெடுக்க சட்ட சமூகம் அமைத்துக் கொடுத்திருக்கிற பெரு வாய்ப்பு உள்ளாட்சித் தேர்தல். 

ஆனால் இந்தத் தேர்தலை முன்னெடுப்பதற்கு மாநில, ஒன்றிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதே தமிழ்நாட்டு மற்றும் இந்திய வரலாறாக இருந்து வருகிறது. 

கடந்த முறைகூட தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மனமில்லாமல், மாவட்டங்களை எல்லாம் பிரித்து, ஒன்பது மாவட்டத் தேர்தலையாவது தள்ளிப் போட முடிந்ததே என்று தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்தவர்கள் மகிழ்ந்ததைப் பார்க்க முடிந்தது. 

ஒருவழியாக அந்த மீது ஒன்பது  9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று ஒரு வழியாக முடிந்தது. 

இன்றைய தேர்தலில் ஊர்ப்பகுதி (வார்டு) உறுப்பினர்,  ஊர்ப்பகுதி தலைவர் தேர்வுக்கான வாக்குச் சீட்டில் பெயர் குறிக்கப்படாமல் வெறுமனே இலச்சினை மட்டும் அச்சிட்டிருந்தது, பெரும்பாலான வாக்காளர்களை தடுமாறச் செய்வதாக இருந்தது. தேர்தல் ஆணையம் இந்தக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.

தமிழ்;;நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்துச் சென்றனர். வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,028.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.