Show all

மழையோ மழை! சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை பெய்துள்ளது.  நந்தனம் ஒ.எம்.சி.ஏ. பகுதியில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில்  நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.