Show all

பாஜகவிற்கு உணர்த்தியுள்ள தமிழ்நாடு! தமிழே எங்கள் அடிப்படை- பொருள் இலக்கணம் எங்கள் போர்வாள்- மதம் எங்களுக்குக் கிடையாது

மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக வெறும் 1 விழுக்காடு மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளதால். அக்கட்சியின் அரசியல் வியூகம் தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதையும், தமிழே எங்கள் அடிப்படை- பொருள் இலக்கணம் எங்கள் போர்வாள்- மதம் எங்களுக்குக் கிடையாது. என்று தமிழ்நாடு பாஜகவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதையும் பாஜக உணர்ந்தாக வேண்டும்.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. அதேபோல் நகராட்சியையும் பாஜக கைப்பற்றவில்லை. அதே சமயம் பேரூராட்சியில் குறிப்பிடத்தகுந்த இடங்களை பாஜக வென்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12838 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதுவரை வெளியான மாநகராட்சி முடிவுகளில் 21 மாநகராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 21 மாநகராட்சிகளில் 1090 வார்டுகள் உள்ளன. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வானார். மீதம் உள்ள 1086 வார்டுகளில் ஒன்றில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மீதம் உள்ளதில் 760 இடங்களில் திமுக வென்றுள்ளது. அதாவது 70 விழுக்காட்டிற்கும் மேலாக திமுக மாநகராட்சிகளில் வென்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் இதன் மூலம் திமுக கைப்பற்றுகிறது. 

பாஜகவை தூக்கிப்பிடித்த காரணம் பற்றியே தொடர்ந்து சறுக்கிய வண்ணமே இருக்கும் அதிமுக 134 மாநகராட்சி வார்டுகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 60 மாநகராட்சி வார்டுகளையும், பாஜக 15 மாநகராட்சி வார்டுகளையும் பெற்றுள்ளது. சிபிஐ எம் -21 வார்டுகளை (பாஜகவை விட அதிகம்) பெற்றுள்ளது.

இன்னொரு பக்கம் நகராட்சி வார்டுகளை கணக்கிட்டால் 18 பேர் போட்டியின்றி தேர்வு, 1 தேர்தல் களைவு போக 3712 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் அதிமுக 620 இடங்களை வென்றது. திமுக 2286 நகராட்சி இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 146 இடங்களை வென்றுள்ளது. சிபிஐ எம் - 40 இடங்களை வென்றுள்ளது. பாஜக இங்கு 56 இடங்களை வென்றுள்ளது.

பேரூராட்சி வார்டுகளை பார்த்தால் திமுக 7406 இடங்களில் 4388 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதிமுக 1207 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 367 இடங்களை கைப்பற்றி உள்ளது. பாஜக 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது. இந்த நிலையில் பாஜக ஒருவகையில் பார்த்தால் 3வது பெரிய கட்சி போல தெரியலாம். ஆனால் உண்மையில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை பெற்றுள்ளது.

இருப்பினும் தனியாக போட்டியிட்ட கட்சி என்ற அடிப்படையில் பார்த்தால் பாஜக குறிப்பிடத்தகுந்த இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த கட்சிக்கும், பாஜகவிற்கு இடையிலான வேறுபாடு மிக மிக அதிகமாக உள்ளது. எடுத்;துக்காட்டாக பாஜக 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது அதிகமாக தோன்றலாம். ஆனால் இங்கு திமுக 4388 வார்டுகளையும், அதிமுக 1207 வார்டுகளையும், காங்கிரஸ் 367 வார்டுகளையும் பேரூராட்சியில் வென்றுள்ளது.

நகராட்சி வார்டுகளிலும், மாநகராட்சி வார்டுகளிலும். அதிலும் 760 மாநகராட்சி வார்டுகளில் திமுக வென்றுள்ளது. பாஜக வெறும் 15 வார்டில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது முதல் இடம் பிடித்த திமுகவிற்கும் மூன்றாம் இடம் பிடித்த பாஜகவிற்கும் மிக அதிக இடைவெளி உள்ளது.

அதேபோல் வாக்கு விழுக்காட்டு அடிப்படியில் மாநகராட்சி வார்டுகளில்:
திமுக 58.37 விழுக்காடு
அதிமுக 10.26 விழுக்காடு
பாஜக 1.16 விழுக்காடு

நகராட்சி வார்டுகளில்:
திமுக 60.19 விழுக்காடு
அதிமுக 16.16 விழுக்காடு
பாஜக 1.46 விழுக்காடு

பேரூராட்சி வார்டுகளில்:
திமுக 57.58 விழுக்காடு
அதிமுக 15.84 விழுக்காடு
பாஜக 3.02 விழுக்காடு

இதில் பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே பாஜக 3 விழுக்காட்டு வாக்குகளை பெற்றுள்ளது. மற்ற நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் வெறும் 1 விழுக்காடு வாக்கு மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக மதமாற்றுப்பாட்டை கையில் எடுத்தது. அரியலூர் மாணவி வழக்கு பற்றி பாஜக தீவிரமாக பரப்புரை செய்து வந்தது.

தேர்தல் நாள் அன்றும் அதற்கு முன்பும் கூட முகமதியப்பெண்கள் அணியும் முக்காடு சர்ச்சை பேசுபொருளானது. ஆனால் பாஜகவிற்கு இது பெரிய அளவில் தேர்தலில் உதவியதாக தெரியவில்லை. 

மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக வெறும் 1 விழுக்காடு மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளதால். அக்கட்சியின் அரசியல் வியூகம் தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதையும், தமிழே எங்கள் அடிப்படை- பொருள் இலக்கணம் எங்கள் போர்வாள்- மதம் எங்களுக்குக் கிடையாது. என்று தமிழ்நாடு பாஜகவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதையும் பாஜக உணர்ந்தாக வேண்டும்.

ஆங்கில ஆண்டு 1965களில் ஒன்றிய ஆட்சியில் அமைந்திருக்கிற அதிகார மமதையில் இருந்த காங்கிரஸ் முன்னெடுத்திருந்த ஹிந்தித் திணிப்பிற்கு எதிராக திமுகவை தமிழ்நாடு மீட்டியது. 

தற்போது ஹிந்துத்துவா திணிப்பு, ஹிந்தி, சமஸ்கிருதத்; திணிப்பு, மாநில உரிமைகளைப் பறித்து ஒன்றியத்தில் குவித்தல் என்கிற பாஜகவின் அதிகார மமதைகளுக்கு எதிராக மீண்டும் தமிழ்நாடு அதே திமுகவே தகுதியானது என்று முடிவெடுத்து மீட்டியுள்ளது. வாழ்க தமிழ்நாடு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,168.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.