Show all

ஊகச்செய்திக்கு எச்.ராசா எதிர்வினை!

மிகவும் மகிழ்ச்சி! ஆனால், ஆங்கில ஆண்டு 1965களில்; ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, திமுக ஒலித்த முழக்கங்களை ஹிந்தி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் பதாகைகளாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா, என்று ஓர் ஊகச்செய்திக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் பாஜகவின் அடாவடி கருத்தாளர் எச்.ராசா. 

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்- உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஒருபக்கம் செய்தி பரவிவருகிறது.

'மிகவும் மகிழ்ச்சி! ஆனால், ஆங்கில ஆண்டு 1965களில்; ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, திமுக ஒலித்த முழக்கங்களை ஹிந்தி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் பதாகைகளாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா' என்று அந்த ஊகச்செய்திக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் பாஜகவின் அடாவடி கருத்தாளர் எச்.ராசா.

எச்.ராசாவின் பதிவின் கீழே கருத்து பதிவிட்டுள்ள திமுக ஆதரவாளர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள்- 
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் எரிவாயு அதையொட்டி எல்லாப் பொருள்களும் விலையேற்றம் கண்டு இலங்கையோடு இந்தியா போட்டியில் கலந்து கொண்டுள்ளது.

இவைகள் தொடர்பாக எச்.ராசா கருத்து சொல்லாமல் யூக அடிப்படையில், ஒரு செய்தி வெளியானதை பெரிதாக பேசிக் கொண்டிருப்பதில் நாம் பொருத்த விரும்புவது இதுதான்! 

சீரழிந்து கொண்டிருக்கிற இலங்கை அந்த வகைக்கு வரக்காரணமாய் சிங்களப்பேரினவாதிகள் முன்னெடுத்திருந்த அதே (ஹிந்தி)பேரினவாத அரசியலை கைக்கொண்டிருக்கிறார் எச்.ராசா என்று விமர்சனங்கள் செய்வதை பார்க்க முடிகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,212. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.