Show all

கட்சிகளின் தரவரிசை! ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்

தமிழ்நாட்டு மக்கள் திருத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்வுத் தாள்களில், திமுக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆட்சிக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மருத்துவமனைகள், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கே, நுழைவுத் தேர்வு முன்னெடுக்கும் பாஜக பின்ன மதிப்பெண் 0.56 பெற்ற நிலையில், பாஜகவுக்கு தேர்ச்சி கிடைக்க வில்லை.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விழுக்காட்டு அடிப்படையில் கட்சிகளின் தரவரிசைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்தத் தேர்தல் நடந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், அரசிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி நடந்தது. 

ஒன்றிய உறுப்பினர், மாவட்ட உறுப்பினர் ஆகிய இரண்டு முதன்மையான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தாம் கைப்பற்றி உள்ளன. 

140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1180 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. திமுக மட்டும் தனியாக 974 இடங்களை வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. அதிமுக தனியாக 212 இடங்களை வென்றுள்ளது. பா.ம.க. 45 இடங்களை ஒன்றிய உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. 

மாவட்ட உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள்: திமுக - 90.85 விழுக்காட்டு இடங்கள் 
அதிமுக - 1.31 விழுக்காட்டு இடங்கள் 
காங்கிரஸ் - 5.23 விழுக்காட்டு இடங்கள் 
பாஜக - உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு இடங்களை கூட பெறவில்லை. முடிவு அறிவிக்கப்படாதவை 1.96 விழுக்காட்டு இடங்கள்.
 
மாவட்ட உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுகதான் அதிக இடங்களை வென்றுள்ளது. 
திமுக - 90.85 விழுக்காட்டு இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. 
அதிமுக - 1.31 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 5.23 விழுக்காட்டு இடங்கள் திமுக கூட்டணியில் விசிக 3 இடங்களை பெற்றுள்ளது. இதனால் விசிகவும் மாவட்ட உறுப்பினர் இடங்கள் அடிப்படையில் அதிமுகவை விட பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், 
திமுக - 68.26 விழுக்காட்டு இடங்கள் 
அதிமுக - 14.84 விழுக்காட்டு இடங்கள் 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 2.32 விழுக்காட்டு இடங்கள் பாஜக - 0.56 விழுக்காட்டு இடங்கள் 
சிபிஐ - 0.21 விழுக்காட்டு இடங்கள் 
சிபிஐஎம் - 0.28 விழுக்காட்டு இடங்கள் 
தேமுதிக - 0.07 விழுக்காட்டு இடங்கள் 
மற்றவை - 12.46 விழுக்காட்டு இடங்கள் 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.