Show all

முன்னறிவிப்பு இல்லாத திடீர் மழை! மார்கழி குளிரோடு இந்த மழையும் சேர்ந்த நிலையில் நடுநடுங்குகிறது சென்னை

வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை அறிக்கையாளர்கள், ஏன் முகில் கூட வனத்தைக் கருக்கச் செய்து, எந்த முன்னறிப்பும் செய்யா நிலையில் சென்னையில் கொட்டி நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது திடீர் மழை.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் கடந்த நான்கைந்து மணி நேரமாக மழை கொட்டி வரும் நிலையில் இதுகுறித்து வானிலை முன்னறிவிப்பு ஏதும் இதுவரை விடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சென்னை தலைமைச் செயலகத்தினுள் தண்ணீர் புகுந்ததால் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

முன்னறிப்பு இல்லா மழையால் ஆயிரம்விளக்கு, இராயப்பேட்டை, அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, புதுப்பேட்டை உள்ளிட்ட முதன்மைச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இவ்வாறு பெய்து வரும் மழையை கிட்டத்தட்ட மேகவெடிப்பு என சொல்லலாம் என தன்னார்வல வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். மார்கழி மாத குளிரில் இந்த மழையால் மேலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,113.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.