Show all

நான்கு மாணவ, மாணவிகள் மற்றும் 15 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! திருவாரூர் மாவட்டத்தில்

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு கணினி பயிற்சிக்காக எடமலையூர் சென்ற ஆசிரியர்கள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு முழுவதும் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் சில பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அடியக்கமங்கலத்தில் 11ம் வகுப்பு மாணவி, நீடா மங்கலத்தில் 12ஆம் வகுப்பு மாணவன், வலங்கைமானில் ஒரு மாணவி, தலைக்காடு பகுதியில் ஒரு மாணவர் என நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையே, இரண்டு கிழமைகளுக்கு முன்பு கணினி பயிற்சிக்காக எடமலையூர் சென்ற ஆசிரியர்கள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  

இதையடுத்து,  4  மாணவ மாணவிகள் உள்பட 19 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,70,999.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.