Show all

பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் கணிப்பு! தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை எப்படியிருக்கும்

தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவிப்பது என்ன? 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டை தாக்கிவிட்டன. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. 

தமிழ்நாட்டின் கீழைக்கடலில் நிலைகொண்டு இருக்கும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் தீவிரமாக கனமழை பெய்து கொண்டு கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வானிலை குறித்து பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். 

பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் பதிவில், சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் செவ்வாய் மற்றும் புதியம் கிழமையும் விட்டு விட்டு மழை பெய்யும். சென்னையில் மோசமான மழை என்பது முடிந்துவிட்டது. 

பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 12000 கன அடி பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 3100 கன அடியாக உள்ளது. அடையாருக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் நீர் வரவில்லை. ஆதனூர் உட்பட மற்ற பகுதிகளில் இருந்தும் இதற்கு நீர் வரத்து உள்ளது. 

தென் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைப்பொழிவு பகுதியாக இருக்கும். 

மணிமுத்தாறு மட்டுமே இந்த ஆண்டு இதுவரை நிரம்பவில்லை. இன்னும் 2-3 நாட்களில் அதுவும் நிரம்பிவிடும். தமிழ்நாட்டின் மேலைக்கடலில், கேரளா அருகே தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் கேரளாவில் அடுத்த 1 -2 நாட்களுக்கு மழை இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2-3 நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இது வலுவாக இருந்து புயலாக மாறினால் ஆந்திரா நோக்கி செல்லும். இது வலிமை குறைந்து மென்மையாக இருந்தால் மீண்டும் வடதமிழ்நாட்டிற்கு வந்து சேரும். 

இப்போது வரை இது நடு அல்லது மேற்கு ஆந்திராவை தாக்கும் என்றே கணிப்புகள் சொல்கின்றன. இன்னும் நேரம் இருக்கிறது. தெளிவான புள்ளிகள் கிடைத்தபின் தரவேற்றம் செய்யப்படும். இது மட்டுமே ஆந்திராவிற்கு என்றால், அதோடு ஈரப்பதமும் செல்லும் என்பதால் நமக்கு மழையில் இருந்து ஓய்வு கிடைக்கும், என்று பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.