Show all

குடமுழுக்கு கண்ட முருகன்! சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பேரளவு சிலை

சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முருகனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. உலகஅளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் கோயில். இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேரளவான முருகனின் சிலையை நிறுவத் திட்டமிட்டு சிலை அமைக்கும் பணி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்தப்பணி தற்போது முடிவடைந்து இன்று சிறப்பாக குடமுழுக்கு விழா முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முருகனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. உலகஅளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி.

தற்போது முத்துமலையில் நிறுவப்பட்டுள்ள இந்த முருகனின் சிலை அதைவிட 6 அடி உயரமானது. அதுமட்டுமல்லாது மலேசியாவில் உள்ள முருகனை வடிவமைத்த தியாகராசர் சிற்பியே இந்தத் திருக்கோயிலையும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரளவாக அமைந்த முருகர் சிலையில் ஒரு கையில் வேலும் மற்றொறு கையால் நம்மை வாழ்த்துவது போன்றும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய முருகனுக்கும், இங்குள்ள முருகனுக்கும் பல மாற்றங்கள் உள்ளன. சிலை முழுவதும் தங்கத்தகடு சாற்றப்பட்டுள்ளது. சிலை ஐவண்ண நிறத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர்கள் முருகனை சுற்றி நின்று தெளிவாகப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முருகனுக்குப் பேரளவு சிலைஎடுப்பது மகிழ்ச்சி. வழிபாட்டை பார்ப்பனியர் ஒருவருக்கு கையளிக்காமல் குலதெய்வ வழிபாட்டு முறையில் முன்னெடுத்தால் பெருமகிழ்ச்சி எய்தலாம். செய்யுமா நிருவாகம்.?
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,209. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.