Show all

மின்னணு தகவல் பலகை! இயக்கி வைத்து பாரிசோதித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை தனது அலுவலகத்தில் இருந்தபடியே முதலமைச்சர் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது மின்னணு தகவல் பலகை

08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை தனது அலுவலகத்தில் இருந்தபடியே முதலமைச்சர் கண்காணிக்க இருக்கிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை கணினிமய தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன் மூலம் நான் அன்றாடம் பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் அதில் இடம்பெறும். கிழமைக்கு ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப்போகிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வருக்கான மின்னணு தகவல் பலகை (டேஷ்போர்டு) தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட்டார். வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள்தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை ஒருங்கிணைக்கப்பட்டன.

இதில், முதல்வர் விரும்பும் துறையின் தகவல்களை உடனடியாகப் பார்க்க முடியும். இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும்மின்னணு தகவல் பலகை! இயக்கி வைத்து பாரிசோதித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணியில் 50-க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பலகையை நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இயக்கி வைத்து பரிசோதித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.