Show all

கலப்புத் திருமணச்சான்று கிடையாது! மதமாற்றம் முன்னெடுத்தவருக்கு எப்படி என்கிறது உயர்அறங்கூற்றுமன்றம்

மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், மதம் மாறியவர்களுக்குக் கலப்பு திருமண சான்று வழங்கினால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படும் என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கிறித்துவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்த நிலையில், கலப்பு மண சான்று கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.