Show all

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு!

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு நிகழ்த்த உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பில், ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு நிகழ்த்த உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் 430051 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு நிகழவுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தடுப்பூசி முன்னெடுப்புகளில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்க உள்ளதால், கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய தாய்சேய் நல மைய ஊழியர்களைப் பயன்படுத்த நலங்குத்துறை திட்டமிட்டுள்ளது. சுழற் சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான முறிகள் கொண்டுதரப்படுகின்றன. 

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் அதனை ஒட்டிய தமிழ்நாட்டு மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முதன்;மைத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவை மாநகராட்சியில் அகவை; முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்புக்காக வீடு வீடாக சென்று அதிகாரிகள் முறிகளை வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படும் என, பேரூராட்சி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் முதல் பரிசாக செல்பேசி, இரண்டாம் பரிசாக மின்சார அடுப்பு மற்றும் மூன்றாம் பரிசாக உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை, நாளொன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் எனும் விகிதத்தில், 3 கோடியே 48 லட்சம் தடுப்பூசி தடவைகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.